சீருடையில் மது அருந்திய ஜெய்னுப் நிஷா பணியிடை நீக்கம்: எஸ்.பி நடவடிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரத்தில் சீருடையில் இருந்தவாறு மது அருந்திய பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரத்தில் கார் ஒன்றில் அமர்ந்தபடி, பெண் காவலர் ஒருவர் சீருடையில் மது அருந்திய வீடியோ காட்சிகள் இன்று காலைமுதல் இனையதளங்களில் வைரலாக பரவியது. அந்த காணொளி காட்சியில் மது போதையில் இருக்கும் பெண் காவலரை, எதிரில் இருக்கும் ஒரு ஆன் வீடியோ எடுக்கிறார். ஆனால் அவர் சுதாரிப்பாக அவருடைய முகத்தை மட்டும் காட்டவில்லை.
இந்த காட்சியில் ஏற்கனவே போதையில் இருக்கும் பெண் காவலர், மேலும் மது அருந்துகிறார். பின்னர் போதையில், அருகிலுள்ளவர் வாடி போடி என்றும், அதற்கு பெண் காவலர் போடா என்று கூறுகிறார். பின்னர் இருக்கையில் சாய்ந்து தள்ளாடுகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தற்போது சம்மந்தப்பட்ட பெண் காவலர் ஜெய்னுப் நிஷாவை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related News