மூல நோய்! இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி? எதை சாப்பிடக்கூடாது

புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் அக அழகைப்பற்றி கண்டுகொள்வதில்லை, வெளியே சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு இருப்பதால் நோய்கள் முற்றிய நிலையிலேயே மருத்துவரை நாடுகிறோம்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஆசன வாய் நோய்களை குறிப்பிடலாம், அதிலும் மூல நோய் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம்.
இக்கட்டுரையில் மூல நோய் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றியும், அதன் அறிகுறிகள் , சிகிச்சை முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
மூல நோய் என்பது என்ன?
மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் ரத்த நாள வீக்கமே மூல நோய். இது உள்மூலம், வெளிமூலம் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. உள் மூலம் என்பது, ஆசன வாயின் உட்பகுதியில் ஏற்படும். வெளிமூலம், ஆசன வாயின் வெளிப்பகுதியில் ஏற்படும்.
வெளிமூலத்தை விரல்களால் தொட்டு உணர முடியும்; உள் மூலத்தை அறிகுறிகள் மூலமாகவும், மருத்துவரின் உதவியுடன் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்

யாருக்கெல்லாம் வரலாம்
கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், மலம் கழிக்க முடியாமல் நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வரும்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கும், கடும் வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி மலம் கழிக்கும் போதும் ஆசன வாய் பாதிக்கப்பட்டுக்கு மூல நோய் வருகிறது.
இதுதவிர எப்பொழுதும் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்.
மேலும் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூல நோய் ஏற்படலாம். ஆனால் கர்ப்பக் கால மூலநோயானது பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். சில பெண்களுக்கு மட்டும் இதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.
மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
அறிகுறிகள்
 • மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுவது
 • ஆசனவாயில் கட்டி தென்படுதல்
 • மலம் கழித்த பின்னரும் நிம்மதியாக உணராமை
 • ஆசனவாயை சுற்றி கடுமையான அரிப்பு
 • மலம் கழிக்கும் போது சளி வெளியேறுதல்
 • பல நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்படுதல்
 • உட்கார முடியாமல் சிரமப்படுவது
தவிர்க்க வேண்டிய உணவுகள்
காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், கிழங்குகளில் கருணைக் கிழங்கைத் தவிர, மற்ற கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும், பீன்ஸ், பருப்பு வகைகள், பேரிக்காய், பசலைக்கீரை வாழைப்பழம், நெய்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

சாப்பிட வேண்டியவை
நார்ச்சத்து மிகுந்த காய்கறி, பழ வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கீரை, வெண்டைக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் பழங்களில் முக்கியமாக ஆப்பிள், வாழை, பப்பாளி மற்றும் சாத்துக்குடி ஆகியவற்றையும் உட்கொள்ளல் சிறந்த பயனைத் தரக்கூடும்.
இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி?
 • கோரைக் கிழங்கு ஒரு பங்கும், வெள்ளைப் பூண்டு இரண்டு பங்குமாக வைத்து நசுக்கி, எலுமிச்சை பழ அளவு எடுத்து, பாலில் போட்டுக் காய்ச்சி, காலை மாலை சாப்பிடவும்.
 • மூலப் புண் ஆறுவதற்கு பாவட்டை இலையை அவித்துக் கட்டுவதே போதுமானது. இரண்டே வேளையில் குணம் காணலாம்.
 • நெல்லி முள்ளியும், வெந்தயமும் வறுத்துப் பொடி செய்து தயிரில் கலக்கி உண்டால், மூலக் கடுப்பு உடனே விலகும். இரண்டு வேளைக்கு மேல் மருந்து தேவையிராது. காலை நேரத்தில் மட்டும் அருந்தவும்.
 • மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.
 • தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, மூலம் சரியாகிவிடும்.

 • உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும்.

Related News