பாலை ஃபிரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? எவ்வளவு நேரம் வைக்கலாம்! அதை குடித்தால் என்னாகும்?

நம் உணவுப்பொருட்களில் எப்போதும் பாலுக்கு மிக முக்கிய இடமுண்டு. உணவு சாப்பிடுவதை விட பால் குடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அதிகம்.
பாலில் சத்துக்கள் அதிகம் அது ஒரு சர்வரோக நிவாரணி என்கிற ரீதியில் தான் பால் நமக்கெல்லாம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
பால் குறித்து நிலவும் தவறான கருத்துக்கள் சில மக்கள் மத்தியில் இன்றளவும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
அதில் ஒன்றுதான் பாலை ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கக்கூடாது என்பது.
பாலை பிரீசரில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. அதில் குறிபிட்டுள்ள காலாவதி திகதி வரும்வரை பாலை தைரியமாக பிரீசரில் வைத்துப் பயன்படுத்தலாம்.
ஆனால், அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சில குறிப்புகளை கொடுத்துள்ளோம். அவற்றையும் பின்பற்றுவது நல்லது.
பொதுவாக பாலை உறைய வைக்கும்போது விரிவடையும் தன்மை அதற்கு உண்டு. அதனால் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கும்போது அந்த பாட்டில் முழுவதும் ஊற்றாமல் பாட்டிலில் முக்கால் பகுதி ஊற்றி உறைய வைக்கலாம். இதனால் பாட்டில் வெடிக்காமல் இருக்கும்.
உறைய வைத்த பாலை பயன்படுத்துவதற்கு முன்னர், தண்ணீரில் சிறிது நேரம் எடுத்து வைத்து விட்டு பின்பு பயன்படுத்தலாம் அல்லது பிரீசரில் இருந்து பிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பயன்படுத்தலாம்.
இதனால் அதனை உட்கொள்வதற்கு பாதுகாப்பாக இருக்கும். நீண்ட நேரம் வெளியில் எடுத்து வைப்பதால் அதன் வாசனை மற்றும் தோற்றம் கெட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு பயன்படுத்தவும்.
நீங்கள் வாங்கி சேமித்து வைத்திருந்த பால், காலாவதி தேதியை அடைவதற்கு முன்னர், அதனை பல்வேறு வழிகளில் உங்கள் உணவில் பயன்படுத்த திட்டமிட்டு அதன் ஊட்டச்சத்துகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
பால் தனது காலாவதி தேதியை நெருங்கிவிட்டால், அந்தப் பாலைப் பயன்படுத்தி உங்கள் சமையலை முடித்துக் கொள்ளுங்கள்.

Related News