தந்தையுடன் பிகில் பாண்டியம்மா போட்ட கலக்கல் டான்ஸ்...! தெறிக்க விடும் லைக்குகள் ... இன்ப அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்த நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்திற்கும், நடிப்பிற்கும் பல கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர்.
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிகில் படத்தில் பாண்டியம்மா வேடத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.
அவர் தளபதி விஜய் பிறந்த நாளுக்காக தனது தந்தையுடன் சேர்ந்து 'யூத்' படத்தில் வரும் 'ஆல்தோட்டா பூபதி' பாடலுக்கு நடனமாடி தளபதி விஜய்க்கு டெடிகேட் செய்துள்ளார். குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related News