தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த உணவுகளையெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது..!
இதற்காக இன்று முதல் வருகின்ற 7-ஆம் தேதிவரை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்து 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குறைந்தது 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பால் கொடுப்பதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
குழந்தை பிறந்த உடனே இந்த தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:

தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.
தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள் சரியான அளவில் கிடைக்கிறது.
தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவே 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது கெடுதலாகும்.
தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கிறது.
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை ஆய்வு முடிவுகள் கூறுகின்றன

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை

அதிக காரமான உணவுகளை உட்கொண்டால் குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்னை ஏற்படும். பிராய்லர் கோழி மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகத் தவிர்க்கவும்.

பால்

பசும்பால் பொருள்களில் உள்ள பால் புரதம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் உண்பதை தாய்மார்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.

காபி

அதிக அளவு காபி குடித்தால் அதிலுள்ள ‘கெஃபைன்’ என்னும் வேதிப்பொருள் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும். கேழ்வரகால் தயாரித்த உணவுகளைச் சாப்பிட்டாலும் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

பொரித்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைளுக்கு மந்ததன்மையை ஏற்படுத்துவதோடு, தாயின் உடல் எடையையும் கூட்டி விடும். கார்போனைட்டட் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

மாத்திரைகள்

முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்னரும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவும் மருந்தும் என்பதை மறந்துவிட கூடாது.

Related News