டி20 போட்டியில் விளையாடி முடித்து… நடிகையை திருமணம் செய்த இந்திய வீரர்..!

30 வயது மணீஷ் பாண்டே 23 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலும் இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
நேற்று சூரத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் மணிஷ் பாண்டே தலைமையிலான கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டது. முதலில் ஆடிய கா்நாடகம் 180/5 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக 60 ரன்கள் குவித்தார் மணிஷ் பாண்டே. பின்னா் ஆடிய தமிழகம் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களைக் குவித்து போராடித் தோற்றது.
நேற்றிரவு சூரத்தில் விளையாடி தன் அணி டி20 கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த மணிஷ் பாண்டே, இன்று நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மும்பையில் திருமணம் செய்தார். சித்தார்த் நடித்த உதயம் என்.ஹெச்4 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அஷ்ரிதா

Related News