கல்யாணத்திற்கு முன் அனைத்து ஆண்களும் சிங்கம் தான்… எம்எஸ் டோனி..!

எனது மனைவி எதை விரும்புகிறாரோ, அதையெல்லாம் செய்ய விட்டுவிடுவேன் என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
எம்எஸ் டோனி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது திருமணம் குறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘அனைத்து ஆண்களும் திருமணத்திற்கு முன் சிங்கங்களை போன்றவர்கள். திருமணத்தின் உண்மையான சாராம்சமே, நீங்கள் 55 வயதை கடக்கும்போதுதான்…
எனது மனைவி என்ன செய்ய விரும்பினாலும் அதை நான் அனுமதிப்பேன். ஏனென்றால், எனது மனைவி சந்தோசமாக இருந்தால்தான், அப்புறம் நான் சந்தோசமாக இருக்க முடியும்’’ என்றார்

Related News