உலகக் கோப்பையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அந்த்ரே ரஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அந்த்ரே ரஸல் இடம் பிடித்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன் ரஸலுக்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்ப்ரிஸ் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 105.33 சராசரி வைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அடுத்த போட்டியில் இந்தியாவை வருகிற 27-ந்தேதி ஓல்டு டிராபோர்டில் எதிர்கொள்கிறது.

Related News