விமான நிலையத்தில் பிரபாஸை கன்னத்தில் அறைந்த ஓடிய ரசிகை.! வைரலாகும் வீடியோ.!

பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோகளில் ஒருவராகவிட்டார். 

மேலும், இவருக்கு தெலுங்கு சினிமாவை போலவே தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இவருக்கு பெண் ரசிகைகள் மிக அதிகம். அதிலும் சில ரசிகைகள் வெறித்தனமான ரசிகைகள் இருக்கின்றனர். தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது இந்த சம்பவம். சமீபத்தில் நடிகர் பிரபாஸை விமான நிலையத்தில் பார்த்த ரசிகை ஒருவர் மிகவும் உற்சாகமடைந்தார். பின்னர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட அந்த நடிகை பிராஸ் கன்னத்தில் செல்லமாக அறைந்து ஓடிவிடுகிறார்.

Related News