வாழ்க்கையில் இவற்றை தவிர்த்தாலே போதும் நாம் வெற்றியடையலாம்…!

எம்மில் சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பார்கள். எதிர்மறையாக சிந்திப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிப்பதோடு எமது எதிர்கால வாழ்க்கைக்கும் பாதகமான விளைவுகளை கொண்டு வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பின்வருவனவற்றை தவிர்ப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் எமக்குள் உருவாவதை தடுக்க முடியும். அது என்ன எனக் கேட்கின்றீர்களா?
01. மனதிற்குள் கோபத்தை சுமத்தல்
எமக்கு இழைக்கப்பட்ட துரோகம், அல்லது நாம் செய்த சில தவறான காரியங்களால் நேர்ந்த விளைவுகள் அல்லது ஏதேனும் ஒரு கோபம் ஆகியவற்றை மனதில் சுமப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் குறித்த விடயங்கள் எமது மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழக் காரணமாக அமைந்து விடுகின்றன.
நடந்து முடிந்த விடயங்களை ஒரு போதும் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எது நடந்ததோ அல்லது நடந்து முடிந்ததோ அது நடந்து முடிந்தாயிற்று. எனவே அதனை அத்தோடு விட்டுவிட்டு அதிலுள்ள படிப்பினையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இனி எது நடக்கவிருக்கிறதோ அதனை மட்டும் கருத்திற் கொள்வதே புத்திசாலித்தனம்.
2. சிலர் மற்றையவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு வழி முறைகளைக் கையாள்வர். இதனால் அவர்களது கவனம் முழுவதும் போலியாக நடிப்பதிலேயே இருக்கும். இவ்வாறு போலித்தனம் செய்வதை விடுத்து உங்களது உண்மையான குணம் மற்றும் செய்கைகளே ஏனையோரை திரும்பிப் பார்க்க வைக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.
03. ஏனையோரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்வதோ அல்லது அவ்வாறு எமக்கும் ஏற்பட்டால் நன்றாக இருக்கும் என்று நாட்டம் மட்டும் கொள்வதோ சிறந்ததல்ல. பிறரின் வளர்ச்சியைக் கண்டு அதிர்ச்சியடையாது எமது வளர்ச்சி குறித்து உழைப்பதே சிறப்பைக் கொண்டு வரும்.
04. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதை தவிர்த்து நல்ல எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டும். இதன் மூலம், அவை எமக்குள் உள்ள நேர்மறை ஆற்றலை பெருக்கும்.

Related News