பூமியை தாக்க காத்திருக்கும் பெரிய விண்கல்?..! asteroid could not attack earth

நமது வானியல் ஆராய்ச்சிகள் துவங்கிய சமயத்தில் இருந்தே., வானியல் குறித்த பல அறிய முடியாத மற்றும் விளக்க இயலாத தகவல்களும்., பல சர்ச்சை விஷயங்களும் நமது காதுகளை துளைத்துக்கொண்டு இருக்கும். இதனைப்போன்று பூமி போன்ற கிரகம்., பால்வெளி அண்டம் போன்ற பல அண்டங்கள் மற்றும் இது குறித்த கற்பனைகளும் நம்மை தனி உலகிற்கே அழைத்து செல்லும் அளவிற்கு இருக்கும். 
வானியலை பொறுத்த வரையில் பொதுவான கேள்வி மற்றும் ஐயமாக இருப்பது., பூமி மீது பூமியின் பரப்பளவை விட அதிகம் கொண்ட விண்கற்கள் தாக்க வாய்ப்புள்ளதா? என்றும்., பூமியில் வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? அவர்கள் எந்த கிரகத்தில் இருக்கிறார்கள்? பூமிக்கு வந்துள்ளனரா? என்ற சந்தேகமும் தான். 
இந்த விஷயங்கள் குறித்த பல வந்ததிகள் அவ்வப்போது திடீரென பரவி வருவதும்., இன்றைய இணைய காலகட்டத்தில் வந்ததிகள் இணையத்தின் வளம் வந்து கொண்டு இருப்பது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில்., பூமியில் விண்கல் தாக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை ஆராய்ச்சியாளர் லீவைஸ் டார்ட்நெல் மறுத்துள்ளார். 
பிரிட்டன் நாட்டில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைகழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழத்தில் அறிவியல் தொடர்பியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருபவர் தான் லீவைஸ் டார்ட்நெல். இவர் டெட் எக்ஸ் பேச்சாளராக இருந்து வரும் நிலையில்., தற்போது பூமியினை தாக்கும் விண்கற்கள் (ஆஸ்ட்ராய்டு) குறித்து விளக்கம் அளித்துள்ளார். 
பூமியினை விண்கற்கள் தாக்கும் ஆபத்து என்பது இல்லை. இனி வரும் காலத்திற்கும் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாது. பூமியை தாக்கி தகர்க்கும் அளவிற்கு பெரிய விண்கற்கள் ஏதுமில்லை. இது குறித்த தொடர் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பொது வரை கண்டறியப்பட்ட பெரிய அளவிலான விண்கற்கள் பூமியை தாக்கும் அளவிற்கு பெரியவை இல்லை என்று தெரிவித்தார். 

Related News