கணவன் – மனைவிக்குள் ஒரே சண்டையா..? விட்டுக் கொடுத்து வாழ இப்படி வழிபடுங்க..!

துட்டுக் கொடுப்பதால் இன்பமில்லை, லட்டுக் கொடுப்பதால் இன்பமில்லை, விட்டுக்கொடுப்பதால் தான் இன்பம் என்று சொல்வார்கள்.
தம்பதியர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்லும் வாழ்க்கை தான் வியக்குமளவிற்கு வெற்றியைத் தருகிறது.
புதிதாக திருமணமான தம்பதியரைப் பார்த்து நீங்கள் மதுரையா? சிதம்பரமா? என்று கேட்பர்.
காரணம் மதுரை என்றால் ‘மீனாட்சி ஆட்சி’, சிதம்பரம் என்றால் ‘நடராஜர் ஆட்சி’.
அதாவது கணவன் கைமேலோங்கியிருக்கிறதா? அல்லது மனைவியின் கை மேலோங்கியிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள இக்கேள்வியைக் கேட்பது வழக்கம்.
இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் அவர்கள் ‘திருச்செங்கோடு’ என்று சொல்வர். ஏனென்றால் அங்குள்ள இறைவன் அர்த்த நாரீஸ்வரராக காட்சி தருகிறார். அங்குள்ள இறைவன் ஆண் பாதி, பெண் பாதி உருவத்தில் காட்சி தருகிறார்.
அதே உருவத்தில் சிவகங்கை வைரவன் பட்டியில் வைரவர் சன்னிதிக்கு அருகில் அர்த்த நாரீஸ்வரர் சிற்பம் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரவரை வழிபட்டால் கணவர் சொல்வதை மனைவி கேட்பார். மனைவி சொல்வதைக் கணவர் கேட்பார். இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது. மறுத்துப் பேசாத தம்பதியர்களாக வாழ்வர்.

Related News