குழந்தை பிறந்த சில மாதங்களில் எடையை குறைத்த ராதிகாவின் மகள்!.. படுவைரலாகும் புகைப்படம்

இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சில மாதங்களிலேயே எடையை குறைத்து ஸ்லிம்மாக படுஸ்டைலிஷாக மாறியுள்ளார் ராதிகாவின் மகளான ரேயான்.
80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா, முதல் கணவர் பிரத்தாப்புடன் விவாகரத்தான பின்னர், லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
பின்னர் கடந்த 2001ம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரேயான்க்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார்.
கர்ப்பமாக இருக்கும் போது உடல் பருமனாகி இருந்த ரேயான், தற்போது எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Related News