6 படங்களில் கமிட்டாகி அதற்கு மறுத்ததால் தயாரிப்பாளர்கள் நீக்கினார்கள்.. உண்மையை உடைத்த நாயகி சீரியல் நடிகை..

தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். மலையாள சீரியல் நடிகையாக வலம் வந்தவர் பின் தமிழ் சீரியலான நாயகி சீரியலில் நடிக்க ஆரம்பித்து இல்லத்தரசிகளையும் கவர்ந்து வந்தார்.
இதையடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெற்று தடம், இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க 2, பொனமகள் வந்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இவர் நடிகையாவதற்கு முன் பல் நிபுணராக பணியாற்றியும் வந்துள்ளார். பின் நடிப்பில் ஆர்வம் கொண்டு நடிகையாக களமிறங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் தயாரிப்பாளர்களால் தான் பட்ட கஷ்டத்தினை பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தடம் படத்திற்கு முன்பாக 6 படங்களில் என்னை கமிட் செய்து நடிக்க தயாராகினேன். பிறகு ஒப்பந்தம் செய்த படங்கள் ஆறிலிருந்தும் என்னை நீக்கி விட்டார்கள்.
காரணமே இல்லாமல் படங்களில் இருந்து தன்னை நீக்கி விட்டதை பற்றி யோசித்தேன். தயாரிப்பாளர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்றாலே அதை அதற்கு வேண்டுமானாலும் செய்வார் என்று புரிந்து கொண்டேன்.
அவர்கள் என்னிடம் கேட்டதை நிறைவேறாத காரணத்தில் தான் என்னை ஒதுக்கி விட்டார்கள் என்றும் புரிந்து இதை யாருக்கும் சொல்லாமல் இருந்து வ்ந்தேன்.
தற்போது இதுபற்றி கூறுவதற்கு காரணம் நடிகர் சுஷாந்தின் மரணத்தால் வருத்தப்பட்டேன். தனக்கு நேர்ந்த நிலை அவருக்கும் ஏற்பட்டது. இதுபோல எதுவும் நடக்க கூடாது என்பற்க்காக தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related News