அப்பாவாகும் செய்தியை தனது பிறந்தநாளை முன்னிட்டு உடைத்த நகுல்.!

குழந்தைக்கு அப்பாவாகும் செய்தியை தனது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக நகுல் ஜெய்தேவ் அறிவித்துள்ளார்.
2008ல் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நகுல் ஜெய்தேவ் . அதில் ஹீரோயினாக சுனைனா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டில் அவருடன் மாசிலாமணி படத்திலும் நடித்தார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் அறியப்படும் கதாநாயகனாக திகழ்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் சுனைனாவுடன் இணைந்து 'எரியும் கண்ணாடி' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நகுல் தான் அப்பாவாகும் செய்தியை அறிவித்துள்ளார். நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வருட பிறந்தநாள் தனக்கும், அவரது மனைவியான ஸ்ருதிக்கும் மிகவும் ஸ்பெஷல் என்றும், இறுதியாக தனது மனைவி ஒரு குழந்தைக்கு அம்மாவாக போவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அறிவித்துள்ளார். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் 2016ல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பலர் இந்த தம்பதியருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related News