கில்லி படத்தில் விஜய்யின் அம்மா மகளா இது.. இவ்வளவு நாள் எங்கே இருந்தாங்களாம்!..

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அம்மா கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களை சிறப்பாக செய்பவர் நடிகை ஜானகி சபேஷ். இவர் தமிழில் ஜீன்ஸ், அயன், குஷி, வல்லவன், பூஜை, சிங்கம், பாய்ஸ் மேலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக கில்லி படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவ்வளவு சிறப்பாக செய்திருப்பார். கில்லி படத்தில் நடித்ததை பற்றிக்கூறுகையில் அந்த படத்தில் என்னை பேக்கு அம்மாவாக காமித்து இருப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. 75% கலகலப்பாகவும் 25% கண்டிப்பாகவும் இருப்பாராம்.
தன் மகளை பற்றி கூறுகையில் தனக்கு ஒரே மகள், பெயர் த்வனி அவருக்கு வயது 26, பெங்களூரில் பெரிய கம்பெனியில் வேலை செய்கிறாராம். தன் மகளுக்கு நெருக்கடி கொடுக்காமல் வளர்த்து வருகிறேன். பெரியவள் ஆனதும் அவள் எனக்கு நிறைய அட்வைஸ் செய்வாள் என்று மகள் பற்றி கூறியுள்ளார்.

Related News