இறந்த நபருடன் புதைக்கப்பட்ட கார்... இதற்கு பின் இப்படியொரு சோகமா?

பல ஆண்டுகளாக தான் பயன்படுத்திய காரை மரணத்திற்கு பின்னரும் தான் பிரியக்கூடாது என விருப்பப்பட்ட நபரின் ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்தவர் குய். பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த காரை தன்னுடைய உயிருக்கும் மேலாக நேசித்த இவர், மரணத்திற்கு பின்னரும் தன்னுடைய கார் பிரியவே கூடாது என தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை குய் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
குய்-யின் விருப்பத்தின் படி, அவரது குடும்பத்தினர் சடலத்தை காரில் வைத்து பெரிய குழியில் புதைத்துள்ளனர். ஹுண்டாய் தயாரிப்பான சோனாட்டா காரை குய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்துள்ளார். மிகவும் காதலித்த காருடனேயே குய்யின் உடல் புதைக்கப்பட்டது.
இந்த வீடியோவானது பல மில்லியன் பேரால் யூடியூப்பில் பார்க்கப்பட்டு பரபரப்பாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பலர் கிண்டலான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Related News