மார்பு பகுதியில் வைத்திருந்த கைப்பேசியால் மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்!

வேலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் செல்போனை மார்பு பகுதியில் வைத்திருந்ததால் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் என்பவரது மனைவிக்கு தான் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முனிரத்னத்தின் மனைவி இரண்டு பிள்ளைகளுடன், வீட்டில் இருந்துள்ளார். அப்போது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.
அப்போது, திடீரென மின்னல் தாக்கியதால் குறித்த பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில், மார்பு பகுதி வெந்து கருகிய நிலையில் இருந்துள்ளது. எனவே கைப்பேசி வைத்திருந்ததால் தான் அவர் மின்னல் தாக்கி உயிரிழந்தாக கூறப்படுகிறது.

Related News