ஆட்டிப்படைக்கும் சிம்மத்துக்கு காத்திருக்கும் மிக பெரிய ஆபத்து? தனுசு ராசிக்கு எச்சரிக்கை... யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் தெரியுமா?

சார்வரி வருடம் ஆனி 9 ஆம் நாள் ஜூன் 23, 2020 செவ்வாய் கிழமை, துவிதியை பகல் 11.19 மணி வரை அதன் பின் திருதியை திதி. புனர்பூசம் நட்சத்திரம் 01.32 மணி வரை அதன் பின் பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
இன்றைய தினம் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.
மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கு இன்றைய பலன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண
முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை
அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக எச்சரிக்கையோடு இருக்கவும். சத்தான உணவுகளை சாப்பிடுங்க.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும்.
மிதுனம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் நோய் தொற்று அதிகமுள்ள பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு எந்த காரணம் கொண்டும் செல்ல வேண்டாம். சுபகாரியங்கள் பற்றி பேசலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கடகம்
சந்திரன் உங்க ராசிக்குள் சஞ்சரிக்கிறார். உங்க ராசிநாதன் சஞ்சாரத்தினால் இன்று உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும்.
பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும்.
தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்
சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும்.
குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
பிள்ளைகளால் மன அமைதி குறையும் எச்சரிக்கை தேவை.
கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வியாபாரத்தில் லாபம் வரும். இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம்
சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
விருச்சிகம்
சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும்.
திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும்.
தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும்.
எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும்.
எதிலும் கவனம் தேவை. உணவு விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.
உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
வேலையில் பணிச்சுமை குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் பார்ட்னர்களை அனுசரித்து செல்லவும்.
கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். மனதில் உற்சாகமாக இருப்பீர்கள்.

Related News