மார்ச் முதல் அமிதாப்- எஸ்.ஜே.சூர்யாவின் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு

மார்ச் மாதம் முதல் அமிதாப் பச்சானின் முதல் நேரடி தமிழ் படமும் எஸ்.ஜே.சூர்யாவின் முதல் இந்தி படமுமான உயர்ந்து மனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. 
தமிழின் சூப்பர் ஹிட் இயக்குநராக திகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிப்பில் கலக்கி வருகிறார். அவர் நடிப்பில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மான்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. 
இதனையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானின் முதல் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். இது தான் சூர்யாவின் முதல் இந்தி திரைப்படமாகும். உயர்ந்த மனிதன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது. மேலும் தெலுங்கில் டப்பிங் செய்யப்படுகிறது. இந்த படத்தை தமிழ்வானன் இயக்குகிறார். பர்பிள் புல் இன்டர்நேஷனல் பிரைவெட் லிமிடெட் தயாரிக்கிறது. 

Related News