உலகின் மிகப்பெரிய கலைப்பொக்கிஷம் கம்போடியா அங்கோர்வாட் கோயில்!

உலகின் மிகப்பெரிய சுற்றுலா தலங்கள் மற்றும் அதிகமானோர் பார்வையிட விரும்பும் இடத்திற்கான மக்களின் முதல் தெரிந்தெடுப்பாக இருப்பது கம்போடியாவின் அங்கோர்வாட் இந்து கோயில்.
கம்பூச்சியா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் கிமர் என்றும் அழைக்கின்றனர்.
இங்குள்ள உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது  அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான்.
இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. 6-ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை வெவ்வேறு மன்னர்கள் கோயில்களை கட்டினர்.
அவர்களில் முக்கியமானவர்கள் ஜயவர்மன், இந்திர வர்மன், ஹர்ஷ வர்மன் மற்றும் ராஜேந்த்ர வர்மன் ஆவர். சூரிய வர்மனது ஆட்சி காலத்தில் கமய் கட்டிட கலையின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது.
இந்த கோயிலில் திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுகாக கட்டப்பட்டது. ஆனால் 14-15ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது.
கோயிலின் சிறப்புகள்
இன்றைய கட்டிடவியல் வல்லுநர்களும் அறிவியல் அறிஞர்களும் வியக்கும் பிரம்மாண்டமான படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம். 500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷம் என்று கூறலாம்.
இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க வேண்டுமென்றால், பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே முடியும்.
இக்கோயிலை மேலிருந்து பார்க்கும்போது மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது. முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவு வாயில்களும் உள்ளன. கெமர், திராவிடக் கலைகளைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
இரண்டாம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் ஒரு விஷ்ணு கோயிலாகத் தான் கட்டினார். சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார்.
1992-ம் ஆண்டு  யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.
கொடியில் கோயில்
இந்த நாட்டு கொடியில் அங்கோர்வாட் கோயிலை பறைசாற்றும் வகையில் அங்கோர்வாட் சின்னம்  இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
மணர்க்கல்லினால் கட்ட பட்ட கோயில்
பந்தே ஸ்ரீ என்று கூறப்படும் ஆலயம் ஜயவர்மனால் 9-ம் நூற்றாண்டில் மணர்க்கல்லினால் கட்ட பட்ட பிரம்மாண்டமான ஆலயமாகும். ஜயவர்மன் என்ற மன்னன் தனக்கு மட்டுமில்லாமல் தன் தாய் தந்தைக்கும் கோவில் கட்டி உள்ளான். தன்னுடய கோவிலை அங்கோர் தாம் என்றும் தன் தாய்க்கு கட்டிய கோயிலை தாப்ரோம் என்றும் அழைத்து கொண்டான்.
மன்னன் கமய வம்சாவளி தோன்றலாய் இருந்தாலும் இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட காதலால் தனது பெயரை ஜய வர்மன் என சூட்டி கொண்டான். இவனுக்கு பின் வந்த மற்ற மன்னர்களும் இதையே பின் பற்றினர். இவர்கள் காலத்தில் இந்து மதமும் புத்த மதமும் வேறுபாடின்றி தழைத்தோங்கியது.
அங்கோர் வாட் பெரிய கோயிலை காக்கும் கடவுளான விஷ்ணுவை கொண்டு தன்னையும் விஷ்ணுவாக பாவித்து கொண்டு இந்த கோயிலை எழுப்பினான்.

Related News