படர்தாமரையை விரட்டியடிக்க இயற்கை வைத்தியம்! விரைவாக பகிருங்கள்

பூஞ்சைத் தொற்றுக்களால் ஏற்படக்கூடிய ஒரு வகையான சரும பிரச்சனை தான் படர்தாமரை. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும்.
இதை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட்டால் பிரச்சினை இல்லை. இந்த படர்தாமரை ஒருவருக்கு உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம்.
சருமத்தில் படர்தாமரை உடலில் நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவோ ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.
ஒருவருக்கு படர்தாமரை ஏற்பட்டுள்ளது என்பது, பூஞ்சைத் தாக்கத்தின் நான்கு முதல் பத்து நாட்களுக்கு பின்பு தான் தெரியும்.
படர்தாமரையானது சிறியதாக, வட்ட அல்லது வளைய வடிவத்தில் காணப்படும். அதோடு அது சிவந்தும், மிகுதியான அரிப்புகளையும் உண்டாக்கும். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டுவிடும்.
படர்தாமரை பிரச்சினையால் பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, இறுக்கமான உடைகளை அணிவது, பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம், மற்றவர்களுடன் உடைகள், படுக்கை அல்லது துடைக்கும் துண்டைப் பகிர்ந்து கொள்வது போன்றவை படர்தாமரையின் அபாயத்திற்கான இதர அறிகுறிகளாகும்.
படர்தாமரையை சரியான சுகாதாரத்தின் மூலம் மற்றும் ஒருசில இயற்கை வழிகளின் மூலம் எளிதில் சரிசெய்துவிடலாம்.
நல்ல சுகாதாரம்
படர்தாமரையை சரிசெய்ய வேண்டுமானால், முதலில் சுகாதாரத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்க உதவும்.
அதோடு விரைவில் குணமாகவும் உதவியாக இருக்கும். ஒருவர் தங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், படர்தாமரை பரவுவதைத் தடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆகவே படர்தாமரை உள்ள இடத்தை தினமும் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். அதேப் போல் குளித்து முடித்த பின், அப்பகுதியை துணியால் நன்கு துடையுங்கள்.
பூண்டு
பூண்டும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பூண்டு பூஞ்சை தொற்றுக்களால் ஏற்படும் படர்தாமரையில் இருந்து விடுவிக்கும்.
பூண்டு பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின் அந்த பகுதியை ஒரு துணியால் கட்டி பல மணிநேரங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை என பல வாரங்கள் பயன்படுத்தி வாருங்கள்.
தினமும் 1-2 பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் சருமத்தைத் தாக்கிய பூஞ்சை உயிர் வாழ்வது மற்றும் பரவுவது கடினமாக இருக்கும்.
வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளது. இது படர்தாமரைக்கு நல்ல சிகிச்சை அளிக்கும்.
வேப்பிலை எண்ணெமயை தினமும் 2-3 முறை படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வாருங்கள்.
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வையுங்கள்.
பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்ய, விரைவில் படர்தாமரை மறையும்.
அயோடின்
2 சதவீதம் அயோடின் டின்சரைப் பயன்படுத்தி எளிதில் படர்தாமரையை சரிசெய்ய முடியும். அதற்கு 2 சதவீத அயோடின் திரவத்தை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி தடவ வேண்டும்.
இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என சில வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

Related News