உத்தரப்பிரதேசத்தில் நடந்த விபரீதம் – பாம்பு கடிக்கு சாணியில் புதைத்து வினோத மருத்துவம்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேவேந்திரி என்ற பெண் அடுப்பு எறிப்பதர்க்காக காட்டில் விறகு பொறுக்கிய போது, இவருடைய கையில் திடீர் என பாம்பு கடித்தது. பாம்பு கடித்ததை தொடந்து சத்தமிட்ட இவரை, உடனடியாக இவருடைய குடும்பத்தினர் உள்ளூர் வைத்தியரிடம் அழைத்து சென்றார்.
அந்த மருத்துவர் இந்த பெண்ணின் கையில் பாம்பு கடித்த இடத்தை கயிற்றால் இறுக்கமாக கட்டி, இவரை பசு மாட்டு சாணத்தில் சுமார் 75 நிமிடம் புதைத்து வைத்தால் பாம்பின் விஷம் இறங்கி விடும் என கூறி… இந்த பெண்ணை சாணத்தில் புதைத்து வைத்தார்.
இதனால் அந்த பெண் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்தார். பாம்புக் கடிக்கு, மருத்துவமை சென்று உரிய மருத்துவம் பார்க்காமல் சாணத்தில் புதைத்தால், விஷம் இறங்கி விடும் என்கிற மூட நம்பிக்கையை நம்பியதால் இவருடைய 5 குழந்தைகளும் தற்போது தாயை இழந்துள்ளது.
மருத்துவமனை தொலைவில் இருந்தாலும், உள்ளூர் மருத்துவர்களிடம், முதலுதவி சிகிச்சை மட்டுமே பெற்றுக்கொண்டு. இப்படி விஷக்கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவ மனைக்கு அழத்து செல்வது சிறந்தது. சீரிய விழம் உள்ள பாம்புகள் தீண்டினால் மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Related News