இரட்டை அர்த்த மெசேஜ் அனுப்பிய ஆசிரியரை வெளுத்தெடுத்த மாணவிகள்!

இரட்டை அர்த்த மெசேஜ் அனுப்பிய பஞ்சாப் ஆசிரியரை, கல்லூரி வளாகதிற்குள்ளேயே வைத்து மாணவிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு இரட்டை அர்த்த மெசேஜ்ஜை அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கல்லூரி வளாகத்தில் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பொறுமையை இழந்த மாணவிகள், பேராசிரியரை அடித்து கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு இழுத்து சென்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உயர்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related News