கொரோனா உடையில் கொள்ளையடித்த கும்பல்.. சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ந்துபோன நகைக்கடை உரிமையாளர்!

கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதுமே பரவி கொண்டிருக்கிறது. இதுவரையில் இதற்கான சரியான மருந்தை கண்டுப்பிடிக்க முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் கொள்ளையர்கள் சிலர், தங்களது அடையாளங்கள் தெரியாமல் இருக்க வேண்டி தனிநபர் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு அங்குள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்துள்ளனர்.
மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் (CCTV) பதிவாகியிருந்தது. அந்த நகைக்கடையின் பின்பக்க சுவரை உடைத்த கொள்ளையர்கள் அது வழியாக புகுந்து சென்று கொள்ளையடித்துள்ளனர்.
மொத்தமாக 780 கிராம் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றதாக நகைக்கடை உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளான இப்படி ஒரு சூழ்நிலையிலும், திருடுவதற்கு புதிய வழிமுறைகளை கொள்ளையர்கள் கண்டுபிடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News