மச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை! கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி

சந்தேக கணவரின் உறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி மீது பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.
புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியன்(38). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் குடும்ப பிரச்சினைக் காரணமாக கவிதா பிரிந்து தனது தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்த பாண்டியன் கவிதாவிற்கு போன் செய்த போது, தனது சகோதரியிடம் பணம் வாங்கி தருகிறேன் சொந்தமாக படகு வாங்கி தொழில் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
பணம் வாங்க நேற்று முன்தினம் கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு பாண்டியன் சென்ற போது, அவரிடம் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு சரசு அறிவுரை கூறியுள்ளார்.
அதற்கு பாண்டியன் கவிதா வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்துள்ளார். முதலில் அவருக்கு புத்தி சொல் எனக் கூறியுள்ளார்.
தன்னை வேறு நபருடன் தொடர்புபடுத்தி பேசியதால் ஆத்திரமடைந்த கவிதா கொதிக்க கொதிக்க இருந்த பாலை துாங்கிக் கொண்டிருந்த கணவரின் உறுப்பில் ஊற்றியுள்ளார்.
வலியால் துடித்த பாண்டியன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதோடு, கவிதா பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News