ஒரு காதலனுக்காக சண்டையிட்ட திருநங்கைகள்.. கடைசியில் நடந்த ஒரு கொலை!

ரமேஷ் எனக்கு தான் சொந்தம் ரைசாவும், மஞ்சுவும் மல்லுக்கட்டி உள்ளனர்.. ஒரு ஆளுக்கு 2 திருநங்கைகள் சண்டை போட்டு கொண்டிருந்தால், திடுதிப்பென்று உள்ளே நுழைந்து ரமேஷ் எனக்குதான் சொந்தம் என்று கவின் என்ற இளைஞர் தகராறு செய்துள்ளார்.. சுடுகாட்டில் நடந்த இந்த சண்டையில், கடைசியில் ரமேஷை கொன்றே விட்டனர்!
கோவை பனைமரத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதையடுத்து போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது இறந்தவர் பெயர் ரமேஷ் என்பதும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கோவையில் கார் டிரைவராக இருந்திருக்கிறார் ரமேஷ்.. இவருக்கு திருநங்கைகள் 2 பேருடன் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வரவும் போலீசார் அந்த திருநங்கைகள் யார் என்று விசாரித்தனர்.
அந்த 2 பேருமே பனைமரத்தூரை சேர்ந்த ரைசா, மஞ்சு ஆவர்.. இவர்களுடன்தான் ரமேஷூக்கு நெருக்கம் இருந்துள்ளது.
இதில் ரைசா கொஞ்சம் ஓவர் நெருக்கம்.. ரைசாவை கல்யாணமே செய்தாராம் ரமேஷ்.. இதனால் மஞ்சுக்கு பொறாமை வந்துள்ளது.. அதனால் ரமேஷை தான் அபகரித்துவிட்டாராம் மஞ்சு.. இதுதான் அடிப்படை பிரச்சனையே.. ஒரு ஆளுக்கு 2 பேர் அடித்து கொண்டிருக்கிறார்கள்.
சம்பவத்தன்று முத்தண்ணன் குளத்தருகே இதே பஞ்சாயத்து நடந்துள்ளது.. அப்படியே சண்டை போட்டுக் கொண்டே பனைமரத்தூர் சுடுகாட்டுக்குள் 3 பேருமே போய்விட்டனர்.. சுடுகாட்டில் 3 பேரும் சண்டை போடுள்ளனர்..
அதற்குப் பிறகு 3 பேரும் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. கன்னியாத்தா கோவில் திண்ணையில் உட்கார்ந்து மறுபடியும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.. எனக்கு நீங்க 2 பேருமே முக்கியம் என்று ரமேஷ் கட் & ரைட்டாக சொல்லி விட்டார் போலும். இது ரைசாவுக்கு ஆத்திரத்தை தந்தது.. தன்னுடன் மட்டும் வாழ வில்லை என்ற்ல் கொலையே செய்வேன் என்று மிரட்டி உள்ளார்.. இதே மிரட்டலைதான் மஞ்சுவும் விடுத்தார்.
இவ்வளவு உயிராக இருக்கும் 2 பேரும் நம்மை எப்படி கொல்வார்கள் என்று நினைத்து ரமேஷ் அசால்ட்டாக இருந்துள்ளார்.. ஆனால் திடீரென மஞ்சு கத்தியை எடுத்து ரமேஷை குத்த, சத்தம் கேட்காமல் இருக்க ரைசா ரமேஷ் வாயை மூடிவிட அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார் ரமேஷ். பிறகு அந்த சடலத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இந்த நிலையில் இதில் திடீர் திருப்பமாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா என்ற விசாரணை நடக்கம்போதுதான், ரமேஷூக்கு திருநங்கைகள் மட்டுமல்லாது ஒரு இளைஞனுடன் ஹோமோ செக்ஸ் உறவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.. சம்பவத்தன்று உறவுக்கு கவின் ஒத்துவரவில்லை என்பதால், கவின்தான் ரமேஷை குத்திவிட்டதாகவு,ம் சொல்கிறார்கள்.
ஆக மொத்தம், ரமேஷ் கொலையில் உண்மை நிலவரம் தெரியவில்லை.. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவையும் வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.. உண்மையில் ரமேஷை கொன்றது ரைசாவா? மஞ்சுவா? கவினா? உண்மையை விரைவில் போலீசார் வெளிகொணருவார்கள் என நம்பப்படுகிறது

Related News