விளையாட்டு வினையாகியது.. ‘டிக்-டாக்’கில் வீடியோ வெளியிட வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டிக்-டாக்கில் வீடியோ வெளியிட உயிருடன் மீனை விழுங்கிய வாலிபர் மூச்சு திணறி இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது 22). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் வெற்றிவேல், தனது நண்பர்கள் 2 பேருடன் ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார்.
அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அவர், செல்போனில் ‘டிக்-டாக்’ வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கினார். அப்போது வெற்றிவேல் விழுங்கிய மீன் எதிர்பாராதவிதமாக அவரது சுவாசக்குழாயில் சிக்கியது.

Related News