திடீரென கழன்று விழுந்த மார்பகம் அதிர்ச்சியில் உறைந்த டிவி தொகுப்பாளர் பின்னர் தெரிய வந்த பகீர் உண்மை

மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த டிவி தொகுப்பாளினி ஒருவர், செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்டதால் விபரீதத்தை சந்தித்துள்ளார்.
எல்லாரையும் போல எடுப்பான மார்பகம் பெற வேண்டும் என்ற ஆசையில் ரஷ்யாவை சேர்ந்த  லீரா குட்ரியாவ்சேவா (48 வயது), கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்டனர்.
இதற்காக, அவரது மார்பகத்தின் உள்ளே அறுவை சிகிச்சைமுறையில் சிலிக்கான் பந்துகள் பொருத்தப்பட்டன. இதையடுத்து,
எடுப்பான கவர்ச்சியான மார்பக அழகை அவர் பெற்றார். அத்துடன், மாடலிங் துறையிலும் அவருக்கு
அதிக வரவேற்பு கிடைத்தது. டிவி தொகுப்பாளினி வேலையும் மகிழ்ச்சியாக சென்றது.  
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், திடீரென, செயற்கை சிலிக்கான் மார்பகம் கிழிந்து, அதில் உள்ள
திரவம் வெளியில் கசிய தொடங்கியது. இதனால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதன்பேரில், உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக,மருத்துவ சிகிச்சை பெற தீர்மானித்தார். அவருக்கு 4 மணிநேரம் போராடி, சிலிக்கான் மார்பகத்தை மருத்துவர்கள் அகற்றினர்.  
செயற்கை மார்பகத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய அறுவை சிகிச்சையை பெண்கள் யாரும் செய்துகொள்ள வேண்டாம்,
அது உயிருக்கே உலை வைத்துவிடும் என்று, டிவி தொகுப்பாளினி லீரா தற்போது வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதைப் பார்த்தாவது
அழகு பைத்தியம் பிடித்த பெண்கள் திருந்துவார்களா என்பதே மில்லியன் டாலர் கேள்வி… 

Related News