இளையராஜா விழாவுக்கு அழைக்கப்போன விஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

இளையராஜாவுக்கு எடுக்குற விழாவுக்கு என்னையெல்லாம் நேர்ல வந்து கூப்பிடணுமா. நீங்க சொல்லாட்டாலும் முதல் ஆளா வந்து முதல் வரிசையில உட்கார்ந்து விசில் அடிச்சுப் பார்ப்பேன்’ என்று விஷால் உட்பட்ட விழாக்குழுவினருக்கு உற்சாகம் பொங்க சேதி சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்ரவரி மாதம் 2ம் மற்றும் 3ம் தேதிகளில் பிரம்மாண்ட திரை கொண்டாட்டம் நிறைந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்திகழ்ச்சி இரு தினங்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி,கமல் தொடங்கி இந்தியாவின் உச்ச நட்சத்த்ரங்கள் அனைவரையும் அழைக்கும் திட்டத்துடன் விழாக்குழுவினர் செயல்பட்டுவருகின்றனர்.

நிகழ்ச்சியின் முதல் நாளான்று இசைஞானியின் பாடலுக்கு முன்னிணி திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளும், தொடர்ந்து 2ம் நாளில் இசைஞானி இளையராஜா மற்றும் ஆர்கெஸ்ட்ரா குழு சார்பில் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பொது மக்களும்  பங்கேற்க சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டிக்கெட் புக்கிங்கும் நடைபெற்று வருகிறது.
இந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஏற்கனவே கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் மற்ற முக்கிய நட்சத்திரங்களை அழைக்க மும்பை புறப்படுவதற்கு முன்னதாக , நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் மற்றும் நடிகர் மனோபாலா ஆகியோர் நேற்று ரஜினியின் வீட்டிற்கு நேரடியாக சென்று இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
 

Related News