அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமானது Nokia 8 Sirocco

நோக்கியா நிறுவனத்தின் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.
இதனால் தொடர்ச்சியாக புதிய வெர்ஷன் கைப்பேசிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது Nokia 8 Sirocco எனும் மற்றுமொரு புதிய கைப்பேசியினை ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இதன் விலையானது 910 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இதனுடன் Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
தவிர 12 மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள், 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3260 mAh என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related News