இந்தியாவின் மிக நீளமான டாப் 10 ரயில் சுரங்கங்கள்!!!

ரயில்கள் பயணம் செய்யும் தூரங்களை குறைக்கவும் ரயில் தடங்களை உருவாக்கும் பொழுது இடையில் வரும் பாறைகள் மற்றும் மலைகளை குடைந்து ரயில் சுரங்கங்கள் ஏற்படுத்தப் படுகிறது. இந்தியாவில் கொங்கன் ரயில் வேயில் பல நீளமான சுரங்கங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள 10 பெரிய ரயில் சுரங்கங்களை பற்றி பார்ப்போம்.
10. போரயில் சுரங்கப்பாதை (Borail Railway Tunnel)
போரயில் சுரங்கப்பாதை ஜடிங்காலாம் பூர் மற்றும் ஹால்பிலோங் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த சுரங்கம் 3.2 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த சுரங்கப்பாதை அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
9. பார்ஸம் சுரங்கப்பாதை (Barcem Railway Tunnel)
பார்ஸம் சுரங்கப்பாதை பாலி மற்றும் கானகோனா ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த சுரங்கம் 3.3 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கொங்கன் ரயில் பாதையின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை கோவாவில் அமைந்துள்ளது. இது 1997 ஆம்ஆண்டில் கட்டப்பட்டது.
8. சவர்டே சுரங்கப்பாதை (Savarde Railway Tunnel)
சவர்டே சுரங்கப்பாதை கமதே மற்றும் சவர்டே ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்தசுரங்கம்3.4 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கொங்கன் ரயில்பாதையின் ஒருபகுதியாக இந்த சுரங்கப்பாதை மஹாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இது 1997 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
இது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பானிஹால் நகரத்தின் வடக்கே பிர்பஞ்சால் மலைத் தொடரில் கட்டப்பட்டுள்ளது. பானி ஹாலில் தொடங்கி ஹில்லர் ஷாஹாபாத் வரை நீண்டுள்ளது இது. இரயில் இந்த சுரங்கப் பாதையை கடக்க ஒன்பது நிமிடங்களை எடுத்து கொள்கிறது.
7. பெர்ட்டேவடி (Berdewadi Railway Tunnel)
பெர்ட்டேவடி சுரங்கப்பாதை அடவலி மற்றும் விலவேட் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்தசுரங்கம் 4 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கொங்கன் ரயில்பாதையின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப் பாதை மஹாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இது 1997 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
6. டிக்சுரங்கப்பாதை (Tike Railway Tunnel)
இந்த சுரங்கப்பாதையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்ன கிரி மற்றும் நிவாசருக்கு இடையில் அமைக்கப் பட்டுள்ளது. டிக் சுரங்கப்பாதையும் கொங்கன் ரயில்வே பிரிவின் கீழ்வரும் மிக நீளமான சுரங்கங்களில் ஒன்றாகும். இது 4.07கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது 1997 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
5. நட்டுவாடி சுரங்கப்பாதை (Natuwadi Railway Tunnel)
கொங்கன் ரயில் பாதையின் மகாராஷ்டிரா பிரிவில் கரஞ்சாடி மற்றும் திவான்காவதி ரயில் நிலையங்களுக்கு இடையே நட்டுவாடி சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. நட்டுவாடி சுரங்கப்பாதை 4.3 கி.மீ. நீளம் கொண்டது. இது கொங்கன் ரயில்பாதையில் இரண்டாவது நீண்ட சுரங்கப்பாதை ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
4. கார்பூட் சுரங்கப்பாதை (Karbude Railway Tunnel)
கொங்கன் ரயில் பாதையின் ஒரு பகுதியான கார்பூட் ரயில் சுரங்கப்பாதை மகாராஷ்டிராவில் ரத்தனகிரிக்கு அருகிலுள்ள கொங்கன் ரயில் பாதையில் அமைந்துள்ளது. 6.5 கிலோமீட்டர் வரை நீளமான இந்த சுரங்கப்பாதை உக்க்ஷி மற்றும் போக் ரயில் நிலையங்களுக்கு இடையேஅமைந்துள்ளது. கார்பூட் சுரங்கம் கொங்கன் ரயில் பாதையின் மிக நீளமான சுரங்கப் பாதையாகும்.
3. ரபூரு சுரங்கப்பாதை (Rapuru Railway Tunnel)
முக்கியமாக சரக்கு ரயில் சேவைக்காக நிறுவப்பட்ட 6.6 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் செர்லோபள்ளி மற்றும் ரபூரு ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. 25 ஜூன் 2019 அன்று, இரண்டு சரக்கு ரயில்கள் வெற்றிகரமாக இரண்டு நிலையங்களுக்கிடையில் ஓடியது.
இந்த சுரங்கப்பாதை தொடங்கி 43 மாத கால இடைவெளியில் நிறைவடைந்துள்ளது. இது நியூ ஒபுலவரி பள்ளி-வெங்கடச்சலம் ரயில்பாதையின் ஒரு பகுதியாகும். ஒரு சரக்கு ரயில் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்திலிருந்து ஒபுலவரி பள்ளிக்கு பயணிக்க சராசரியாக 10 மணிநேரம் ஆகும்.
ஆனால் புதிதாக முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட இந்தசுரங்க வழியில் பயணநேரம் சுமார் 5 மணி நேரமாக குறைகிறது. இந்த சுரங்கப்பாதை கட்டுமானத்திற்காக நியூ ஆஸ்திரேலியன் டன்னலிங் மெத்தாட் என்னும் NATM முறையில் சுமார் 460 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.
2. சங்கல்தான் (Sangaldan Railway Tunnel)
சங்கல்தான் ரயில்வே சுரங்கப்பாதை ஜம்மு – பாரமுல்லா பாதையின் கத்ரா – பானிஹால் பகுதிக்கு இடையில் ஜம்மு – காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை 4 டிசம்பர் 2010 இல் நிறைவடைந்தது. இந்த சுரங்கப்பாதை மொத்தம் 8 கிலோமீட்டர் தூரம் கொண்டது.
1. பிர்பஞ்சால் சுரங்கம் (PirPanjal Railway Tunnel)
பானி ஹால் ரயில்வே டன்னல் என்றும் அழைக்கப்படும் பிர்பஞ்சால் சுரங்கம்11.215 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஆசியாவின் இரண்டாவது மிக நீண்ட ரயில்வே சுரங்கப் பாதையாக இது கருதப்படுகிறது

Related News