அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த டீச்சரின் உடல்.. அதிர்ச்சியில் கணவன்..!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் வேதபிரகாஷ். ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக வேலை பார்க்கிறார். இவருக்கு போன மாசம் 7-ம் தேதி அங்கிதா என்ற பெண்ணுடன் கல்யாணம் ஆனது.
அங்கிதாவுக்கு 25 வயசு.. ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறார். தம்பதி இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் போன 7-ம் தேதி அங்கிதாவை காணவில்லை. இதனால் பதறிய கணவன், மனைவியை பல இடங்களில் தேடினார். கடைசியில் வேதபிரகாஷ் அப்பகுதி போலீசில் புகாரும் செய்தார். இதையடுத்து போலீசாரும் தனிப்படை அமைத்து காணாமல் போன அங்கிதாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு குட்டையில் டீச்சரின் சடலம் மிதப்பதை கண்டறிந்தனர். அதாவது ராஞ்சி பகுதியிலிருந்து 50 மைல் தொலைவில் பர்காகனா ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த குட்டை உள்ளது.
இதனால் சடலத்தை போலீசார் குட்டையிலிருந்து மீட்டனர். ஆனால் அது அழுகிய நிலையில் கிடந்தது. பின்னர், அங்கிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிதா வீட்டில் ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனராம்.
எனவே அங்கிதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆனால் புதுப்பெண் இப்படி குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை தந்துள்ளது.

Related News