தளபதி 63 படத்தில் இணைந்த யோகிபாபு: உற்சாகத்தில் ரசிகர்கள்!

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 21-ம் தேதி தொடங்க உள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

இதில் 'பரியேறும் பெருமாள்' பட நடிகர் கதிர் மற்றும் ரோபோசங்கர் மகள் ஆகியோர் சமீபத்தில் இணைந்ததாகச் செய்திகள் வெளியாகின. 
இந்நிலையில், தளபதி 63 படத்தில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக அப்படத்தின் படக்குழு அறிவித்துள்ளது.விஜய்யுடன் சேர்ந்து நான்காவது முறையாக யோகிபாபு நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு வேலாயுதம் , மெர்சல் ,சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News