தமிழ்நாடு மற்றும் உலக அளவில் வசூலில் பேட்ட படத்தை முந்திய விஸ்வாசம் :தல மாஸ்!

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூலில் யார் முந்தியது என்பது தெரிய வந்துள்ளது.
பேட்ட படம் ரிலீஸான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ. 23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ. 26 கோடி வசூலித்துள்ளது. மேலும் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் விஸ்வாசம் தான் வசூலில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் விஸ்வாசம் ஆட்சி செய்வது போன்று வெளிநாடுகளில் பேட்ட தீயாக வசூல் செய்து கொண்டிருக்கிறது.
அஜித் என்றால் ஓபனிங் கிங் என்பார்கள். ரஜினியின் படம் வெளியானதால் அஜித் பட வசூல் பாதிக்கப்படவில்லை. இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் வரும் என்று நம்பித் தான் தயாரிப்பாளர்கள் ஒரே நாளில் வெளியிட்டனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
விஸ்வாசம், பேட்ட படங்கள் ஒரே நாளில் மோதவில்லை மாறாக சேர்ந்து வருகின்றன. இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்ய வேண்டும் என்று சிவா நல்ல மனதுடன் கூறியது போன்று தான் நடந்து கொண்டிருக்கிறது.

Related News