இந்த வேலைக்கு இதனை பேரு விண்ணப்பமா?! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தகவல்!!

இலங்கையில் 1976-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. 
மரண தண்டனை கைதியை தூக்கில் போடும் பணியில் ஈடுபடுபவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதிலிருந்து அந்த பதவியில் யாரும் இல்லாமல் காலியாக தான் இருந்துள்ளது.
பின்பு 5 வருடங்களுக்கு பின்னர் இலங்கை நீதி மற்றும் சிறை மறு சீரமைப்பு துறை பணி நியமனம் செய்ய ஆட்கள் தேவை என  விளம்பரம் தற்பொழுது செய்துள்ளது. 
இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி தேதியாக பிப்ரவரி 25 என அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஒரு அமெரிக்கர் உட்பட 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்சமயம் அந்த பணிக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. 
இன்னொரு சுவாரசியமான தகவல் என்னெவென்றால், தேர்விற்கு மட்டும் ஆட்கள் காத்திருக்கவில்லை. போதை பொருள் கடத்திய குற்றத்தில் ஈடுபட்ட 48 பேர் தூக்குக்காக காத்திருக்கின்றனர்.
பணி நியமனம் செய்யப்பட்டவுடன் இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் இவர்களது தண்டனை நிறைவேற்ற படும் என அதிபர் மைத்திரி பால சிறிசேனா அறிவித்துள்ளார். 

Related News