நெட்வொர்க்கிற்கு இடையேயான போட்டியில் ஏர்டெல் அறிவித்த அதிரடி இலவச டேட்டா!.

தொலைபேசி துறையில் எப்போது  ஜியோ நிறுவனம் நுழைந்ததோ அன்றில் இருந்து இலவச ஆஃபர் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டில்  3 மாதங்களுக்கு இலவச சேவையை வழங்கியது. பின்னர், 2017ல் ஹேப்பி புத்தாண்டு  ஆஃபர் என்று புதிய ஆஃபர் திட்டத்தில் மேலும் 3 மாதங்களுக்கு இலவச சேவை வழங்கியது. இதனால் நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் மற்ற தொலைபேசி இணைப்பில் இருந்து ஜியோவுக்கு மாறினர்.

இந்த நிலையில் இன்று ஜியோ புதிய சேவையை  31.3.18  அன்று  பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஓராண்டு சேவை  இலவசமாக  வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தற்போது, ஜியோவுடன் நேருக்கு நேர் போட்டியில் குதித்துள்ள ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய அறிவிப்புகளை வெளிட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம், பிராட்பேண்ட் திட்டத்தில் 1000ஜிபி இலவச டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டமான “பிக் பைட் ஆபர்” மார்ச் 31 2018 வரை மட்டும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

Related News