தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படுகிறது.? ஆன்லைன் வகுப்புகள் நிலவரம் என்ன.?அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக உலகம் இயல்பான வாழ்க்கையை இழந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.
தொற்றுநோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகருத்துவருவதால் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பது சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து பேசிய தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை எனவும், பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும், ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Related News