மதுரையில் ஊரடங்கு : சிவகங்கை எல்லையில் குவிநத மது பிரியர்கள்

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று முதல் அமலுக்கு வந்த இந்த ஊரடங்கில், அதன்படி இந்த ஊரடங்கில், மருத்துவ பணிகள், மருந்தகங்கள் ஆகியவற்றிற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு மூடப்பட்டிருந்ததால்,
சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது. மதுரையை சேர்ந்தவர்கள் புலியூருக்கு சென்று மதுவாங்கி வருகின்றனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அச்சத்தில் புலியூர் மக்கள் உள்ளனர்.

Related News